Share it if you like it
தமிழர்களாய் ஒருங்கிணைவோம்! தளபதி தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் நேற்றைய தினம் முரசொலியில் ஒரு முழுப்பக்க கட்டுரை எழுதி இருந்தார்.
அது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
- தாங்கள் தரமான ஹிந்துக்கள் என்று காண்பிப்பதற்கு ‘அவர்கள்’ (காங்கிரஸ்) எடுத்துக்கொண்ட முயற்சிகளால் அவர்களது இயற்கையான வாக்காளர்களிடம் இருந்தும் அந்நியமாகி விட்டனர். ராகுல் காந்தியை “பூணூல் தரித்த பிராமணர்” என்று அடையாளப்படுத்தியதை கண்டு காங்கிரஸ்காரர்களில் பலர்
- நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன் (நான் உட்பட). மொத்தத்தில் பா.ஜ.க விரித்த வலையில் காங்கிரஸ் விழுந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த குழப்பம் இன்னும் தொடர்வதாகவே நான் கருதுகிறேன். உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக பிரச்சாரம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று இருந்தால், காங்கிரஸ்
- பிரச்சாரம் ‘ஜெய் கணேஷ்’ ஆக இருக்கும் என்று அறிவித்திருப்பதை சரியான தேர்தல் யுக்தியா?” என்று திரு. பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறியதாக தெரிவித்து உள்ளார்.
தன்னை ஒரு ஹிந்து என்று ராகுல் காந்தி அடையாளப்படுத்தி கொண்டதை கூட தாங்கி கொள்ள முடியாமல் பீட்டர் அல்ஃபோன்ஸ் உட்பட பல காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் விட்டார்கள் என்று கூறுவதன் மூலம் இவர்கள் பின்னால் உள்ள கிறிஸ்தவ மிஷநரிகளால் தான் சமூகத்தில் ஒற்றுமை சீர்குலைகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it