பாகிஸ்தான் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு இரண்டு தலைமுறைக்கு மேல் ஜம்மூ காஷ்மீர் மக்களின் நிம்மதியை அழித்தவர்கள் பலர். அதில் மிக முக்கியமான நபர்களில் சையத் அலி ஷா கிலானியும் ஒருவர். காஷ்மீர் பிரிவினைவாதிகளின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
அப்பாவி காஷ்மீர் இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்து, பாரத தேசத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் எண்ணத்தையும், கடந்த 30 ஆண்டுகள் காஷ்மீரில் இரத்த ஆறு ஓட காரணமாகவும். காஷ்மீரை தனி நாடாக மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டவர் இந்த பயங்கரவாதி கிலானி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் உடல் நலகுறைவு காரணமாக பயங்கரவாதி கிலானி இன்று மரணம் அடைந்தார். அதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவருக்கு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீரை காக்க தங்கள் இன்னுயிரை தந்த நமது ராணுவ வீரர்களுக்கு திருமுருகன் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி..
காசுமீர் போராட்ட தலைவர் சையது அலிஷா கிலானி அவர்கள் மறைந்தார். 2009 தமிழீழ இனப்படுகொலை போரை நிறுத்த குரல் கொடுத்தவர். இனப்படுகொலைக்கு பின்பு தமிழர்களுக்கு தனிநாடு தேவை என்றவர். புலிகளின் பின்னடைவு உலகளவில் நடக்கும் தேசிய இன போராட்டங்களுக்கு பின்னடைவு என்றவர். #syedalishahgeelani pic.twitter.com/SGqT8waNYm
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) September 1, 2021
தன் பிள்ளைகளை, பேரன்களை வெளிநாட்டில் படிக்க வைத்து, மற்ற காஷ்மீரி இளைஞர்களை இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இரையாக்கி, பாஸ்போர்ட் கூட பெற முடியாமல் வழக்குகளில், ஜெயிலில் தள்ளிய சையத் அலி கிலானி என்கிற இந்த மிருகம் இறந்தது.
மறுமையிலாவது மனிதனாய் வாழ் மதவெறி மிருகமே. pic.twitter.com/jpu6qLHUPq
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) September 2, 2021