உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை தனக்கு சாதகமாக மாற்றி கதை சொல்லும் சீமான் குறித்து மறைந்த புலமைப்பித்தன் கூறிய கருத்து..!

உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை தனக்கு சாதகமாக மாற்றி கதை சொல்லும் சீமான் குறித்து மறைந்த புலமைப்பித்தன் கூறிய கருத்து..!

Share it if you like it

ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து வியாபாரம் செய்து செல்வந்தராக மாறியவர் சீமான் வைரலாகும் மறைந்த புலமை பித்தன் காணொளி.

உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி சீமான் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

  • பிரபல பாடகர் எஸ்.பி.பி. இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே என்று தன்னிடம் அனுமதி கேட்டது..
  • மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நகைச்சுவை நடிகர் தவசி அவர்களை  நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறாமல். அவர் மறைந்த பிறகு அன்புக்குறிய மாமா தவசி என்று பதிவிட்டது.
  • உயிரோடு இருக்கும் பொழுது ஏ.ஆர். ரகுமான் தாயாரை சீமான் சென்று பார்க்கவில்லை. அவர் மறைந்த பிறகு என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் என்று அவர் அளந்து விட்டதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.

அனைவருக்கும் கதை சொல்லி விளம்பரம் தேடி வரும் சீமான் குறித்து சமீபத்தில் மறைந்த புலமைப்பித்தன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Share it if you like it