ஆளுநர் மாற்றம் இயல்பான ஒன்று தானே ஏன் இவ்வளவு பதற்றம்  – பிரபல திரைப்பட இயக்குனர் கேள்வி..?

ஆளுநர் மாற்றம் இயல்பான ஒன்று தானே ஏன் இவ்வளவு பதற்றம் – பிரபல திரைப்பட இயக்குனர் கேள்வி..?

Share it if you like it

தமிழகத்தின் புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி என்கிற அவர்களை மத்திய அரசு அண்மையில் நியமனம் செய்தது. இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, முன்னாள் இன்டலிஜென்ஸ் BUREAU ஆபிசர். மற்றும் முன்னாள் தேசியபாதுகாப்பு துணைத்தலைவராக இருந்தவர். மேலும் நாகாலாந்தில் தீவிரவாத குழுக்களிடம் பேசி ஆயுதங்களை தூக்கி வீச வைத்து அங்கு அமைதி ஏற்பட மிக முக்கியமாவனர் ஆர்.என். ரவி என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட புதிய கவர்னருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

வி.சி.க தலைவர் திருமா, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் உள்ளூர் போராளிகள் முதற்கொண்டு பலர் புதிய ஆளுநர் நியமனத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்கள் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது.

ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் மாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் ஆர்.என்.ரவி அவர்கள் வருகையில் ஏன் இவ்வளவு பதற்றம்? எதிர்ப்பு?? கண்டனம்???


Share it if you like it