மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சில நடிகர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை நீட் தேர்விற்கு இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வால் எந்த வித பாதிப்பும் இல்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருந்து வரும் இச்சூழ்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அப்பொழுதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க மீது மிக கடுமையான விமர்சனங்களை வைத்த நடிகர் சூர்யா.
போலியான வாக்குறுதி மற்றும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி படிக்கும் மாணவர்களின் மனதில் அவநம்பிக்கையை உருவாக்கிய தற்பொழுது உள்ள தி.மு.க அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்காதது ஏன்? இதே போன்று ஒரு காணொளியை அப்பொழுது வெளியிடாது ஏன்? தற்பொழுது காணொளி வெளியிட வேண்டும் என்று உங்களை தி.மு.க தூண்டியதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.