யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல முக்கியமான நகரங்களில் ஒன்றாக Irving உள்ளது. இங்கு பணியாற்றி வரும் கால்துறையினருக்கு ஹிந்து சுயம்சேவக் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ரக்சா பந்தன் விழாவை நடத்தியுள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நமது கணியன் பூங்குன்றனார் தமிழிலும் வசுதைவ குடும்பகம் என்று சம்ஸ்கிருதத்திலும் தெரிவித்து உள்ள வரிகளுக்கு ஏற்ப உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்ற கொள்கையில் செயல்பட்டு வரும் இயக்கம் ஹிந்து சுயம்சேவக் சங்கம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அமெரிக்காவில் பல சேவை பணிகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக பணி செய்து வரும் ஹிந்து சுயம் சேவக் சங்கம். Irving நகரை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி உள்ளனர். ஹிந்து சுயம் சேவக் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று Irving Police Department தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை பதிவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.