தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து. அமைச்சர்கள், நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள் தங்கள் மனம் போன போக்கில் நம்மை கேட்க யாரும் இல்லை நடப்பது நம் ஆட்சி என்று தங்கள் விருப்பம் போல நடந்து கொள்கின்றனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சி திமுக அலுவலகத்தில் வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் கலந்து சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதே போன்று ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து அமரவைத்து கூட்டம் நடத்தி இருந்தார்.
தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள், தமிழக முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காமல். தாங்கள் வகிக்கும் பதவியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்றால். டாஸ்மாக் ஊழியரும் தமிழக முதல்வரின் ஆணைக்கு கட்டுப்படாமல் “கூடுதல் விலைக்குத்தான் மது விற்போம்” அரசு சொல்வதை கேட்க முடியாது என்று அமைச்சர்கள் போல நடந்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.