குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்! அப்போ இல்ல இப்போ மட்டும் எப்படி?

குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்! அப்போ இல்ல இப்போ மட்டும் எப்படி?

Share it if you like it

தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க-வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை நினைத்து குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன் என தி.மு.க தலைவர் கூறி இருந்தார். ஆபாச பேச்சாளர்களான சுப.வீ மற்றும் திண்டுக்கல் லியோனிக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய பொழுது ஏன் குறுகி நிற்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. எங்களுக்கு மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில், அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும், என தோழமை கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனால், கூட்டணி கட்சிகள் கேட்ட பதவிகளை வழங்க முன்வரவில்லை ஆளும் கட்சி. இதனையடுத்து சில இடங்களில் நகராட்சித் தலைவர், பதவிகளை விட்டுக் கொடுக்க தி.மு.க இணக்கம் தெரிவித்தது. அந்த வகையில், திருப்பெரும்புதூர் நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் போட்டி வேட்பாளரை நிறுத்தி தி.மு.க வெற்றி பெற்று விட்டது. இதே நிலைமை தான் வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தான், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், உடனே பதவியை விட்டு விலக வேண்டும். சிலர் சாதித்துவிட்டதாக நினைக்கலாம். கட்சி தலைவர் என்ற முறையில், நான் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன், என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டான். முன்பு எல்லாம் பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது. வெளிநாட்டு பாலை குடித்ததால், இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போகிறான், என்று பேசிய திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக நியமனம் செய்த பொழுது குற்ற உணர்ச்சியால் முதல்வர் ஏன்? குறுகி நிற்கவில்லை.

மாணவி தற்கொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பொழுது ஏன்? முதல்வர் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கவில்லை. கள்ள உறவுக்கு திருமணம் கடந்த உறவு என்று கூறிய சுப.வீக்கு, தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக நியமனம் செய்த பொழுது ஏன்? முதல்வர் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it