தி.மு.க ஆட்சியில் கழக கண்மணிகள் காவல்துறையினரை நடத்தும் விதம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தி.மு.க நிர்வாகி ஒருவர், காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து, மாமா வேலை பாக்குறியா என்று ஆபாசமாக திட்டிய காணொளி வைரலாகி வருகிறது.
11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க, எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான், தடுத்தா எனக்கு போன் போடுங்க, அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான், என்று கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ’செந்தில் பாலாஜி’ கூறி இருந்தார். அந்த வகையில், இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது. அடுத்து எங்கள் ஆட்சி தான், நாங்கள் பார்க்காத காவல்துறையா? என்று தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு உள்ளது. என்பதை தமிழக மக்கள் இன்று வரை வேதனையுடன் பார்க்கும், அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனம். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு போதிய பாதுகாப்பை, தமிழக அரசால் வழங்க முடியவில்லை, என பா.ஜ.க தலைவர் குற்றம் சாட்டி இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, காவல்துறையினருக்கு உரிய மரியாதை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, வி.சி.க. கொடி எங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாகத் திரிகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று காவல்துறைக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தான், கழக கண்மணி ஒருவர் காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து மாமா வேலை பாக்குறியா என்று ஆபாசமாக திட்டிய காணொளி வைரலாகி வருகிறது.