வேலுர் மாநகராட்சியின் மேயராக பதவியேற்று கொண்ட சுஜாதா ஆனந்தகுமாரை தி.மு.க எம்பி கதிர் ஆனந்த் தனது தந்தையின் காலில் விழும் படி சிக்னல் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும், எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 7 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர். மேலும், பா.ம.க. மற்றும் பா.ஜ.க. தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, மார்ச் மாதம் நான்காம் தேதி தி.மு.க-வை சேர்ந்தவர்கள் மேயர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
அந்த வகையில், 31-வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுஜாதா ஆனந்தகுமார் என்பவரை, வேலூர் மாநகராட்சியின் மேயராக தி.மு.க தேர்வு செய்தது. இந்த பதவி ஏற்பு விழாவில், தி.மு.க எம்.எல்.ஏக்கள், அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், வேலூர் எம்பி கதிர் ஆனந்த்தும் கலந்து கொண்டார். இவர் தான், தனது தந்தையும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், காலில் விழுந்து ஆசி பெறுமாறு மேயர் சுஜாதா-விற்கு சிக்னல் கொடுத்துள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
சமூக நீதி. சுயமரியாதை, பெண் விடுதலை, என்று ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க. மேயர்களை கட்டாயப்படுத்தி அமைச்சர்கள் காலில் விழ வைப்பது கடும் கண்டனத்திற்குறியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.