பெண்கள் கணவருக்கு அடிமையானவள்! கிறிஸ்தவ மதபோதகர் சர்ச்சை கருத்து!

பெண்கள் கணவருக்கு அடிமையானவள்! கிறிஸ்தவ மதபோதகர் சர்ச்சை கருத்து!

Share it if you like it

மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி, என்று பைபிள் வசனம் கூறுகிறது என பெண் கிறிஸ்தவ மதபோதகர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவது பெண் அடிமைத்தனமல்ல. அது தேவனின் கட்டளை என்று, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்து இருந்தார். இவரின், இந்த கருத்திற்கு சமூக வலைத்தளவாசிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். மோகன் சி லாசரஸின் இந்த கருத்திற்கு, எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில், ஹிந்து மதத்தில் மூடநம்பிக்கை உள்ளது. ஹிந்து மதத்தை அழிப்போம், ஹிந்து மதத்தில் மூடநம்பிக்கை உள்ளது. என மேடை தோறும் முழங்கி வரும். திருமா, வன்னியரசு, வீரமணி, போன்றவர்கள். இன்று வரை இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அந்த வகையில், மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி, என்று பைபிளில் உள்ள கொரிந்தியர் 7:4 வசனம் தெரிவித்துள்ளது. என பெண் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கூறியுள்ளார். பெண்ணிற்கு என்ன? உடை அணிய வேண்டும் என்ற சுதந்திரத்தை கூட பைபிளில் தான் முடிவு செய்ய வேண்டுமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கும் வசனங்கள் பைபிளில் உள்ளது. இது குறித்து இப்பொழுதாவது ஹிந்து மதவெறுப்பாளர்கள் பேச முன்வருவார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it