தமிழக அரசு பட்ஜெட் பற்றி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவரும் போட்டோதான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்!
தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையை தொடங்கினார். இதில், வேடிக்கை என்னவென்றால், அவருக்கு தமிழ் வார்த்தைகளை படிக்கவே தெரியவில்லை. திக்கித் திணறி படிக்க முயற்சி செய்தவர், முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டத் தொடங்கிவிட்டார். இதில் ஹைலைட் என்னவென்றால், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்தவர் பழனிவேல் தியாகராஜன் என்பதுதான். அப்படிப்பட்டவர் இப்படி திக்கித் திணறி தமிழை உச்சரித்ததைப் பார்த்து, ‘என்னடா இது சங்கத் தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த சோதனை’ என்று நெட்டிசன்கள் உட்பட பலரும் கிண்டலடித்தனர்.
இது இப்படி என்றால், பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கியதும், அவையில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விட்டனர். இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவையில் இருந்த பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதால்தான், தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, படிக்கும்போதே ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டால் வகுப்பிலேயே தூங்கி வழிவது நமது தமிழர்களின் வழக்கம். அப்படி இருக்க, புரியாத மொழியில், தெரியாத பாஷையில் பேசினால் தூக்கம் வராதா என்ன? என்று நெட்டிசன்கள் உட்பட பலரும் மீண்டும் கிண்டலடிக்கத் தொடங்கி விட்டனர். இப்படி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தூங்கி வழியும் படம்தான் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.
இதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள். கவுண்டமணி – செந்தில் காமெடியை உதாரணமாகக் காட்டி, அண்ணே நீங்க வாசிங்க நாங்க தூங்கணும் என்றும், தூங்கி வழியும் தி.மு.க. சட்டமன்றம் என்று கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். தவிர, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இது தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினின் கனவு பட்ஜெட் என்று பலரும் பில்டப் செய்தனர். ஆகவே, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தூங்கி வழியும் போட்டோவை போட்டு, ‘ஓ.. இதுதான் கனவு பட்ஜெட்டோ’ என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி தி.மு.க. அரசு அறிவித்து ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகக் கூறி ஸ்டிக்கர் தி.மு.க. என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.