அப்போ எருமை திராவிடரா? சீமான் ‘நச்’ கேள்வி!

அப்போ எருமை திராவிடரா? சீமான் ‘நச்’ கேள்வி!

Share it if you like it

எருமை கூடத்தான் கருப்பா இருக்கு. அப்போ எருமை திராவிடரா? என்று சீமான் நெத்தியடி கேள்வி எழுப்பி தி.மு.க.வினருக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரியர், திராவிடர் என்கிற பாகுபாட்டை திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், பாதிக்கப்படுவது பாவம் அப்பாவி தமிழர்கள்தான். காரணம், திராவிடர் என்று சொல்வதா அல்லது தமிழர் என்று சொல்வதா என்கிற குழப்பம்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழர்கள்தான் தொன்று தொட்டு வாழக்கூடிய பழமையான இனத்தவர்கள். ஆகவே, திராவிடம் என்பதே மாயை என்பது ஒரு தரப்பினரின் வாதம். ஆனால், தமிழகத்தில் இருக்கும் அனைவரும் திராவிடர்கள் என்று மடைமாற்றி வருகின்றன திராவிட இயக்கங்கள். இதன் காரணமாக, அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான், டாக்டர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசினார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. உடனே, வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்த திராவிட இயக்கத்தினர், எப்படி இருவரையும் ஒப்பிடலாம். இளையராஜா பேசியதை வாபஸ் என்று அறைகூவல் விடுத்தனர். ஆனால், அனைவரின் முகத்திலும் கரியைப்பூசம் வகையில், தான் பேசியதை வாபஸ் பெற முடியாது என்று நெத்தியடியாகக் கூறிவிட்டார் இளையராஜா. இதனால், மூக்குடைந்து போன திராவிட இயக்கத்தினர், இளையராஜாவுக்கு எதிரான தங்களது வன்மத்தைக் கக்கி வருகின்றனர்.

இந்த சூழலில், இளையராஜாவின் இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு டீ சர்ட், லுங்கி அணிந்தபடி ஒரு போட்டைவை வெளியிட்டு அதில் ‘கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’ என்று பதிவிட்டிருந்தார். யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு முஸ்லீம் மதத்துக்கு மாறி அப்துல் ஹாலிக் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டதோடு, 2015-ம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா என்கிற அப்துல் ஹாலிக் இப்படி பதிவிட்டதும், திராவிட இயக்கத்தினரும் மற்றும் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சியினரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

எனினும், ஒருவர் ஒன்று தமிழராக இருக்க வேண்டும் அல்லது திராவிடராக இருக்க வேண்டும். இரண்டுமாக இருக்க முடியாது என்று பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான், கருப்பாக இருந்தால் திராவிடரா? அப்படி என்றால் எருமைகூடத்தான் கருப்பாக இருக்கிறது. அப்படியானால் அது திராவிடரா? என்று நெத்தியடியாக கேட்டு, தி.மு.க. அண்கோவுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் நாம் தாமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர். மேலும், நெட்டிசன்களும் எருமை மாடு போட்டோவை போட்டு, இவர் திராவிடர் இல்லையென்றால் வேறு எவர் திராவிடர் என்று கலாய்த்து வருகிறார்கள்.


Share it if you like it