ஹிந்தி கத்துக்கிட்டா உனக்கென்னா? பயில்வான் ரங்கநாதன் ‘பளிச்’!

ஹிந்தி கத்துக்கிட்டா உனக்கென்னா? பயில்வான் ரங்கநாதன் ‘பளிச்’!

Share it if you like it

ஹிந்தி கத்துக்கிட்டா உங்களுக்கென்ன? படிக்கிறவன் படிச்சுட்டுப் போகட்டுமே என்று பயில்வான் ரங்கநாதன் அதிரடியாக கூறியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் தோன்றியதிலிருந்தே தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இதற்கு, ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர் திராவிட இயக்கத்தினர். சமீபத்தில் கூட ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியைக் கற்கலாம், இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கும் திராவிட இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒரே காரணத்துக்காக மத்திய அரசின் ஜவகர் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்க அனுமதி மறுத்து வருகின்றன திராவிடக் கட்சிகள். இத்தனைக்கும் நவோதயா பள்ளிகள் முழுக்க முழுக்க இலவச கல்வியை வழங்குபவை. அத்துடன் உண்டு உறைவிடப் பள்ளிகளாகும். இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஹிந்தியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக நவோதயா பள்ளிகளுக்கு தடைபோட்டு வருகின்றனர்.

அதேசமயம், ஏழை மாணவர்கள் தாங்களும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் ஹிந்தி படிப்பதை பெருமையாகக் கருதி வருகின்றனர். ஹிந்தி கற்றுக் கொண்டால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சென்று பணிபுரியலாம். மத்திய அரசு வேலைகளையும் எளிதில் பெறலாம் என்பதால் தமிழக மக்களின் சாய்ஸ் ஹிந்தியாகவே இருந்து வருகிறது. எனினும், தங்களது அரசியல் லாபத்துக்காக ஹிந்திக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும்.

இந்த நிலையில்தான், பிரபல நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், “ஹிந்தி கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். படிக்கிறவன் படிக்கட்டுமே. ஹிந்தி கற்றுக் கொண்டால் இவர்களுக்கென்ன? நவோதயா பள்ளிகள் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா என அனைத்து மாநிலங்களும் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? இத்தனைக்கும் நவோதயா பள்ளிகளில் முழுவதும் இலவசமாக சொல்லித் தருகிறார்கள். இலவசமாக கொடுப்பதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆகவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வந்தால் நான் வரவேற்பேன். நான் ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் ஏற்பட்ட விளைகளை அனுபவித்து வருகிறேன். அந்தக் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று சொல்லி, திராவிடக் கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it