பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக எவ்வளவோ திட்டங்களை செய்திருக்கிறார். ஆகவே, அவரை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று போட்டுத் தாக்கி இருக்கிறார் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்.
சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022′ என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. தகுதியுள்ளவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுவாக, ஒருவர் வெளிநாடு சென்றால் அங்கு 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். திரும்பி வந்ததும் இங்கு 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அப்போதுதான், உடல் நிலை சரியாகும். ஆனால், நமது பாரத பிரதமர் மோடி வெளிநாடு சென்று விட்டு திரும்பினாலும், மறுநாளே டெல்லியிலோ, மும்பையிலோ நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இப்படி ஓய்வின்றி பிரதமர் மோடி உழைத்து வருகிறார். இந்த வயதில் எத்தனை பேர் இப்படி துடிப்புடன் இருப்பார்கள். இப்படி எனர்ஜியான பிரதமர்தான் இந்தியாவுக்குத் தேவை.
உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பார்கள். ஆனால், நமது பிரதமருக்கு நாலாபுறமும் இடிதான். எப்படிப் பேசினாலும், யாருக்கு சாதகமாகப் பேசினாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும். இப்படிப்பட்ட விமர்சனங்களை செவி சாய்க்காமல் சென்று கொண்டிருப்பவர்தான் நமது பிரதமர் மோடி. ஆகவே, பிரதமருக்கு நான் கொடுக்கும் டிப்ஸ் என்னவென்றால், விமர்சிப்பவர்களை 3 மாத குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், 3 மாத குழந்தைக்கு வாயும் இருக்காது, காதும் இருக்காது. அதாவது, நல்லவற்றை தானும் பேச மாட்டார்கள், பிறர் சொல்லும் நல்லதையும் கேட்க மாட்டார்கள். எனவே, அவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை மக்களுக்குச் செய்திருக்கிறார். ஆகவே, மோடியின் பெயர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இன்னும், அவரது திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தால், அவரது பெயர் மேலும் புகழ்பெறும்” என்றார் பாக்யராஜ்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டாக்டர் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப் பேசினார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இதனால், உ.பி.ஸ்களும், பெரியாரிஸ்ட்களும் எப்படி இப்படி பேசலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு இளையராஜாவுக்கு எதிராக வன்மங்களை கக்கி வருகின்றனர். அதேசமயம், அம்பேத்கர் வழித்தோன்றல்களும், பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், உண்மையான நடுநிலைவாதிகளும், சமூக ஆர்வலர்களும் இசைஞானிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தவிர, பாரத பிரதமர் மோடியே இசைஞானியை தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தன்னைப் பற்றிப் பேசியதற்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாக்யராஜும், பாரத பிரதமர் மோடியை புகழ்ந்தி பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, உ.பி.ஸ்கள் அவருக்கு எதிராகவும் வன்மங்களை கக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி உ.பி.ஸ்களை விடாம கதற விடுறீங்களே பாஸ்!