கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய நடிகர் சுரேஷ் கோபி!

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய நடிகர் சுரேஷ் கோபி!

Share it if you like it

கேரளாவில் வசித்து வரும் அஸ்ஸாம் பெண்ணிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு குவிந்து வரும் பாராட்டு.

முன்மி கோகோய் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி. இவர், கேரள மாநிலம் கண்ணூர் தில்லங்கிரி பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் இதுநாள் வரை வசதி குறைவான வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையறிந்த, கேரள திரை உலக சூப்பர் ஸ்டார் மற்றும் பா.ஜ.க எம்.பியுமான சுரேஷ் கோபி நான் உங்களுக்கு வீடு கட்டி தருகிறேன் என ஷாஜி குடும்பத்திற்கு முன்பு ஒருமுறை வாக்குறுதி அளித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சலீம் என்பவர் தனது சொந்த இடத்தின் ஒரு பகுதியில், வீடு கட்டிக்கொள்ள ஷாஜி குடும்பத்திற்கு அனுமதி வழங்கி இருந்தார். இதையடுத்து, பா.ஜ.க எம்.பி முன்மி குடும்பத்திற்கு அந்த இடத்தில் அழகான வீடு ஒன்றினை கட்டிக் கொடுத்துள்ளார். இது குறித்த செய்தியினை கேரளாவின் முன்னணி ஊடகமான ஜனம் டி.வி செய்தியாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சிபிஐ(எம்) கட்சியின் கோட்டையான கண்ணூர் பகுதிக்கு உட்பட்ட இரிட்டி பஞ்சாயத்து தேர்தலில் முன்மி கோகோய் பா.ஜ.க.வின் சார்பில் களம் இறங்கியவர். “பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளார். இவற்றில் சில திட்டங்கள் ஏழைக் குடும்பங்களைச் சென்றயடையவில்லை. இந்தத் திட்டங்களை எனது கிராமத்துக்குக் கொண்டு வரவே பா.ஜ.க.வின் சார்பில் நான் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

/https://www.facebook.com/watch/?v=699727467740846&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing


Share it if you like it