விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய மத்திய அமைச்சரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் கடலோர மாவட்டமான புத்துரைச் சேர்ந்தவர் ஷோபா கரன்ட்லஜே. இவர் கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஷோபா மிகவும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைந்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டவர். 1994-ம் ஆண்டில் சகுந்தலா ஷெட்டியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது, கர்நாடக மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் எட்டியூரப்பா தலைமையில் அமைந்த முதல் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் ஷோபா வெளிச்சத்திற்கு வந்தார். எடியூரப்பாவின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர். ஷோபா கரன்ட்லஜே பா.ஜ.க.வினரால் செல்லமாக ஷோபாக்கா என்று அழைக்கப்படுகிறார். இவர், இந்துத்துவா கொள்கைகளில் உறுதியான பிடிப்பு கொண்டவர். அதேபோல, அரசியல் மற்றும் சமூக வாழ்விலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர். கும்ரதாரா நதியின் குறுக்கே அணை கட்டுவதை தீவிரமாக எதிர்ப்பவர். உடுப்பி மாவட்டம் சிக்மங்களூர் தொகுதி எம்.பி.யான இவர், தற்போது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் தனது இன்னோவா காரில் சொந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் ஷோபா கரன்ட்லஜே. அப்போது, வழியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பலரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஷோபா கரன்டலஜே, தனது காரில் இருந்து இறங்கிக் கொண்டதோடு, காயமடைந்தவர்களை தனது காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர், அவ்வழியாக வந்த ஒரு டூவீலரில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றார்.
இச்சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. இதில், ஹைலைட் என்னவென்றால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில்கூட இச்செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால், தமிழக மீடியாக்கள் எதுவும் இச்செய்தியை வெளியிடவே இல்லை. காரணம், இங்குள்ள மீடியாக்கள் மத்திய பா.ஜ.க. அரசை குறைகூறுவதோடு, தி.மு.க.வுக்கு ஜால்ரா அடித்தே காலம் தள்ளி வருகின்றன. இந்த சூழிலில், மத்திய அமைச்சர் செய்த ஒரு நல்ல செயலை வெளிப்படுத்தினால், தமிழகத்தில் பா.ஜ.க. நுழைந்து விடுமோ என்று கருதியே இச்செய்தியை வெளியிடவில்லை என்று வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.