க்யாரே செட்டிங்கா…? கர்நாடகாவில் அரங்கேறிய நாடகம்!

க்யாரே செட்டிங்கா…? கர்நாடகாவில் அரங்கேறிய நாடகம்!

Share it if you like it

கர்நாடகாவில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்தால், ‘நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது’ என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் தீர்ப்பு வரும்வரை ஹிஜாப் சர்ச்சை விவாதப் பொருளாக இருந்து வந்தது. தீர்ப்புக்குப் பிறகு நீதிபதிகளுக்கு பகிரங்கமாக பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கவனிக்கப்பட்டனர். இதன் பிறகு, ஹிஜாப் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வின் முதல் நாளில் வழக்கம்போல இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆகவே, அவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து விட்டது பள்ளி நிர்வாகம். இதையடுத்து, பல மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி விட்டுச் சென்று தேர்வு எழுதினர். ஹிஜாப் தொடர்பாக வழக்குத் தொடர்ந்த மாணவிகளே ஹிஜாப்பை அகற்றி விட்டு தேர்வு எழுதியதுதான் குறிப்பிடத்தகக்து. அதேசமயம், வேறு சிலர் தேர்வை புறக்கணித்து விட்டுச் சென்றனர்.

இந்த நிலையில்தான், ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர், தேர்வு அறைக்குள் அனுமதிக்காததால் தேர்வை புறக்கணித்து விட்டு திரும்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஹைலைட் என்னவென்றால், அங்கு அரங்கேற்றப்பட்ட நாடகம்தான். அதாவது, அந்த மாணவி ஆட்டோவில் பள்ளிக்கு வருகிறார். அங்கிருந்து இறங்கி உள்ளே செல்கிறார். அந்தப் பள்ளியில் ஒருவர் தயாராக கேமராவுடன் நிற்கிறார். உள்ளே சென்ற மாணவி கையில் ஒரு பேப்பருடன் திரும்பி வருகிறார்.

நேராக விடுவிடுவென்று வெளியே செல்கிறார். அங்கு அவர் வந்த ஆட்டோ அங்கேயே தயாராக நிற்கிறது. நோட் திஸ் பாயின்ட். உண்மையிலேயே அவர் தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கிலும், அந்த மாணவி தேர்வெழுத வேண்டும் என்கிற நோக்கத்திலும் வந்திருந்தால், அவரை இறக்கி விட்ட பிறகு அந்த ஆட்டோ திரும்பிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அந்த ஆட்டோ அங்கேயே நிற்கிறது. அதில் ஏறி மீண்டும் வீடு நோக்கிச் செல்கிறார் அந்த மாணவி. அப்படியென்றால் என்ன அர்த்தம். மாணவி தேர்வை புறக்கணித்துவிட்டுச் செல்வது என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்டு விட்டது. அரசியல் செய்வதற்காக இப்படியொரு நாடகம் அங்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இதைப் பார்த்து விட்டுத்தான் நெட்டிசன்கள் நடிகர் ரஜினி படத்தில் வரும் க்யாரே செட்டிங்கா என்கிற டயலாக்கை பதிவு செய்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Share it if you like it