இந்த அரசால் எந்த பயனும் இல்லை: முதல்வரிடமே புகார் தெரிவித்த பாட்டி!

இந்த அரசால் எந்த பயனும் இல்லை: முதல்வரிடமே புகார் தெரிவித்த பாட்டி!

Share it if you like it

இந்த அரசால் எந்த பயனும் இல்லை என முதல்வரிடமே பாட்டி ஒருவர் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24 – ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் தமிழகத்தில் இன்று வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து, மக்கள் குறைகளை கேட்டார் முதல்வர். அப்பொழுது, தூய்மை பணியாளராக உள்ள பாட்டி ஒருவர் மாதத்திற்கு 3,600 ரூபாய் தருகிறார்கள். இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த பணத்தை வைத்து குழந்தைகளை வளர்க்கவும், படிக்கவும் வைக்க முடியவில்லை. இந்த அரசால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை சார். எங்களுக்கு உதவி செய்யுங்கள் சார் என உருக்கமாக பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அதே கிராம சபை கூட்டத்தில் இங்கு குடிநீர் பிரச்சனை உள்ளதா என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, ஆண்கள் தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது. ஆண்கள் எல்லாம் அமைதியாக இருங்கள். பெண்கள் பதில் சொல்லட்டும் என முதல்வர் கூறியதை அடுத்து, பெண்மணி ஒருவர் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஐயா என்று பதில் அளித்து இருந்தார். இதையடுத்து, உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து வருகிறது என முதல்வர் அப்பெண்மணியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, அவர் பூமியில் இருந்து என பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, எடப்பாடி ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வினர் அழைத்து வந்த அதே நாடக கோஷ்டியாக இருக்குமோ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தற்பொழுது ஸ்டாலினுக்கு பொருந்தியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it