சமூக விரோத கும்பலுடன் நாகை நகர காவல் ஆய்வாளர் பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு, கழக கண்மணிகள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் ஒருபுறம் இருக்க. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதில், லாக்கப் தொடர்பான மரணங்கள் வேறு. இதுதவிர, பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்களுடன் காவல் ஆய்வாளர் பெரியசாமி பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியதை அடுத்து அவர் தற்பொழுது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி-யின் கண்ட்ரோலில் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சுமத்தி இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இச்சம்பவமே சிறந்த உதாரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.