தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த லாக்கப் மரணம் குறித்து நடிகர் சூர்யாவிற்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் இருவர் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவலர்களின் சித்தரவதையின் காரணமாக கொல்லப்பட்டனர் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் குரல் கொடுத்து இருந்தனர். இதற்கு, தி.மு.க ஆசி பெற்ற ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வார கணக்கில் விவாதம் நடத்தி கல்லா கட்டியதை அனைவரும் நன்கு அறிவர்.
இதையடுத்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தற்பொழுதைய முதல்வருமான ஸ்டாலின் உட்பட பலர் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுமட்டுமில்லாது, தி.மு.க சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி இருந்தனர். இதுதவிர, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் நடிகர் சூர்யா ’நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று நம்புவோம் என நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இப்படியாக, அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த சம்பவத்திற்கு உடனே அறிக்கை விட்டவர் நடிகர் சூர்யா. தற்பொழுது, தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் ஆட்சியில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், கடந்த 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) வந்துள்ளனர். அவர்களின் ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் முன்னுக்குப் பின் முரணான வகையில் பதில் அளித்ததை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். மறுநாள் காலை 19.4.2022 விக்னேஷ் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விக்னேஷை காவல்துறையினர் அடித்தே கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டிய சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிடம் கேள்வி ஒன்றினை இவ்வாறு எழுப்பியுள்ளார். இந்தச் சமூகநீதிப் போராளிக்கு யாராவது சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன். மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பதைத் தெரிவிக்கவும். நீதியும் வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.