கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் பத்திரிக்கையாளர் மணி தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக கூறியிருக்கும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
தமிழகம் என்றும் பெரியார் மண் என்று தி.க, வி.சி.க மற்றும் ஆளும் கட்சியின் ஊடகம் முதற்கொண்டு, அக்கட்சியை சேர்ந்த நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் வரை ஒரு பொய்யான பிம்பத்தை தமிழக மக்கள் மீது திணித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக என்பதை தவிர வேறொன்றுமில்லை என்பதை தமிழகம் நன்கு அறியும்.
அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படுபவர் மூத்த பத்திரிக்கையாளர் மணி. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்கிறது. அதனை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். புதுவையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அண்ணாமலையின் பேச்சை எள்ளி நகையாட வேண்டாம் என்று கடந்த ஆண்டு பிரபல ஊடகமான நியூஸ்7-க்கு அளித்திருந்த ஊடக விவாதத்தில் கதறி இருந்தார்.
அந்த வகையில், ஜீவா டுடே இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளர் மணி கூறியிருப்பதாவது; ஜெயலலிதா தற்பொழுது இல்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த 5 வருடத்தில் என்ன ஆகும் என்பது தெரியாது. தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஒரு வருடத்தை நெருங்க போகிறது. அக்கட்சி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தி.மு.க.வின் மீது வெறுப்பு ஏற்படும் நபர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பர். சரியான தலைமை இல்லாத அ.தி.மு.க செயலிழந்து போய் விட்டால், அவர்களின் வாக்கு பி.ஜே.பி.யை நோக்கி தான் நகரும். இதுதவிர, அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆட்சி கட்டிலுக்கு வர 30% சதவீத வாக்குகளை பெற வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வர 12% சதவீதத்தை தாண்டினால் போதும் என அலறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.