பா.ஜ.க.வில் வாரிசு அரசில் இல்லை அதன் காரணமாக இளைஞர்கள் அக்கட்சியை நோக்கி நகர்வதாக மூத்த பத்திரிக்கையாளர் மணி கருத்து தெரிவித்து இருக்கும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.
தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் பத்திரிக்கையாளர் மணி. இவர், கம்யூனிஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரின் கருத்து. பல ஊடகங்களில் இவரது நேர்காணல் வந்துள்ளது. குறிப்பாக, இவர் பேசும் காணொளிகளில் பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதாக மட்டுமே இருக்கும். இந்நிலையில், பத்திரிக்கையாளர் மணி ஜீவா டுடே இணையதள ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது;
நல்ல படித்த இளைஞர் ஒருவர் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நாட்டிற்கு, நன்மை செய்ய வேண்டும் என நினைக்கும் அவர் முதலில் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ அல்லது காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்றா நினைப்பார். நந்தி போன்று மூன்று தலைமுறைக்கும் சேர்த்து அங்கு வாரிசு உள்ளது. சட்டமன்றம் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் அவர் தனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்டு. அதைவிடுங்க, ஒரு கவுன்சிலர் சீட்டு வேண்டும் என நினைக்கும் அவருக்கு யார் சீட்டு கொடுப்பா? அந்த சீட்டை பா.ஜ.க.வால் மட்டுமே கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.
இதை பார்த்தாவது அவர்களுக்கு புத்தி வரவேண்டாமா? பெரியார், அண்ணா, திராவிடம் என்று மட்டும் பேசினால் பத்தாது குடும்ப அரசியலுக்கு பதில் சொல்லங்க என காட்டமாக கூறியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. புதுவையில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அண்ணாமலையின் பேச்சை எள்ளி நகையாட வேண்டாம் என்று அண்மையில் நியூஸ்-7க்கு அளித்த பேட்டியில் மணி குறிப்பிட்டு இருந்தார் என்பது கூடுதல் தகவல்.
மிகச்சிறப்பான தகவல்கள்இது