ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் 1980-களின் பிற்பகுதியிலும் 1990 முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாத்தை தழுவ மறுத்ததால் இப்படுகொலை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி என்பவர் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்கிற படத்தை எடுத்து கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார். இப்படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காஷ்மீரி பண்டிட்கள் தாக்கப்படுவது அதிகாித்து வருகின்றன. இந்த தாக்குதலில் காஷ்மீா் பண்டிட் ஒருவா், சீக்கியா் ஒருவா் மற்றும் புலம்பெயா்ந்த இந்துக்கள் என 7 போ் உயிாிழந்துள்ளனா். மேலும், பலரும் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த சூழலில், நேற்று புத்காம் மாவட்டத்தின் சதுரா கிராமத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அரசு அலுவலர் ராகுல் பட் என்பவர் படுகாயமடைந்தாா். அவரை மீட்டு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பாிதாபமாக உயிாிழந்தாா். இவர், காஷ்மீா் பண்டிட்கள் மறுவாழ்விற்கான சிறப்பு திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், காஷ்மீரி பண்டிட்களும் நேற்று இரவு முழுவதும் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலங்களுக்குப் பிறகு, தற்போதுதான் ஷாக்புரா என்னும் பகுதியில் காஷ்மீா் பண்டிட் குடும்பங்கள் பலா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மீண்டும் அங்கு நடைபெற்று வரும் கொலைகள் காஷ்மீா் பண்டிட்களின் மறுவாழ்விற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. அதேசமயம், காஷ்மீா் பண்டிட்களை மீண்டும் பள்ளதாக்கு பகுதிகளில் குடியமா்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது நடத்தப்படும் தொடா் தாக்குதல்கள் காரணமாக பள்ளதாக்கு பகுதிகளில் மீண்டும் குடியேறினால், தங்களது பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்று கருதுகிறார்கள்.