தன்வினை தன்னை சுடும்: போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

தன்வினை தன்னை சுடும்: போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

Share it if you like it

பஞ்சாப் அரசுக்கு எதிராக அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் குதித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகளின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதற்கு, பஞ்சாப் மாநில விவசாயிகளை தவிர அனைத்து மாநில விவசாய சங்கங்களும் தங்களது முழு ஆதரவினை வழங்கி இருந்தன. தவிர, ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாளரான கீதா கோபிநாத் புதிய வேளாண் சட்டம் குறித்து கூறியதாவது; இந்தியாவில் வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் அவசியம் தேவை. புதிய வேளாண் சட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, அவர்களின் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். புதிய சட்டங்கள் வாயிலாக, அரசு நடத்தும் மண்டிகள் மட்டுமில்லாமல் தனியாரிடமும், வரியை செலுத்தாமல் விவசாயிகள் எளிதில் தங்கள் பொருட்களை விற்க முடியும் என்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இப்படியாக, ஏராளமான நன்மைகளை கொண்டது புதிய வேளாண் சட்டம். இத்திட்டத்தின், நன்மையை எடுத்துக் கூற வேண்டிய தி.மு.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடம் தொடர்ந்து தவறான கருத்தினை முன்வைத்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டது. இதற்கு, சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகள் தூபம் போட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை. இதையடுத்து, பஞ்சாப் விவசாயிகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முகாமிட்டு நீண்ட நெடிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு, தேவையான உதவிகளை டெல்லி முதல்வர் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செய்ததாக அரசியல் நோக்கர்கள் அந்நாட்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். இதனிடையே, பஞ்சாப்பில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னால் காலிஸ்தான் பங்களிப்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சி மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை இன்றுவரை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், கோதுமைக்கான போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஜூன் 10 முதல் நெல் விதைப்பு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு விவசாயிகள் கெடு விதித்துள்ளனர். எங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, எங்கள் பிரச்சினைகளை நாளைக்குள் தீர்க்காவிட்டால், நாங்கள் மேலும் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், சண்டிகரில் நுழைவதற்கான தடுப்புகளை உடைத்து முன்னேறுவோம் இது எங்கள் எச்சரிக்கை என்று விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளை தூண்டி விட்டு ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இப்பொழுதாவது புரிந்து இருக்கும் தன்வினை தன்னை சுடும் என்று.


Share it if you like it