தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பற்றி வி.சிக.வைச் சேர்ந்த வன்னியரசு அவதூறாகப் பேசியதால், நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், பா.ஜ.க. – வி.சி.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருப்பவர் வன்னியரசு. இவர் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் வி.சி.க. சார்பில் கலந்துகொண்ட வன்னியரசு பேசுகையில், அம்பேத்கர் இன்று இந்து சமயத்தில் இருந்து வெளியேறிய நாள். எங்களுக்கு புனிதமான நாள் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசியவர், ஒரு கட்டத்தில் குஜராத்தில் 2,000 முஸ்லிம்களை கொன்ற கொலைகாரன் மோடி என்றார். இதற்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், பிரதமரை அவதூறாகப் பேசிய வன்னியரசுவை கைது செய்ய வேண்டும் என்று கோரி, தமிழகம் முழுவதுமுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பா.ஜ.க.வினர் புகார் செய்தனர்.
இதன் பிறகு, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாத தொடக்கத்தில் கர்நாடகாவின் சர்ஜாபூர் என்கிற இடத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின அமைப்பினர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன், வழக்கம்போல தமிழ்நாடு என்று நினைத்துக் கொண்டு பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பட்டியலின மக்களும், திருமாவளவனுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது மைக் பிடித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், திருமாவளவன், பிரதமர் மோடி எங்க ஹீரோ என்று சத்தமாகக் கூறினார். இதையடுத்து, திருமாவளவனின் பேச்சை பாதியில் நிறுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவருக்கு வழங்கிய நினைவுப் பரிசையும் பறித்துக் கொண்டு கீழே இறக்கி விட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில்தான், ஏ.பி.பி. நாடு என்கிற தனியார் தொலைக்காட்சி சேனல், நேற்று ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், வி.சி.க. சார்பில் கலந்துகொண்ட வன்னியரசு, வழக்கம்போல பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். ஆனால், மேடையில் இருந்த பா.ஜ.க. சார்பில் கலந்துகொண்ட அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துகொண்ட பா.ஜ.க.வினரும், வன்னியரசு பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து மேடை நோக்கி பாய்ந்தனர். உடனே, அங்கிருந்த வி.சி.க.வினர், பா.ஜ.க.வினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது, வி.சி.க.வினர் பா.ஜ.க.வினர் நையப்புடைத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதன் பிறகே நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர்.
பழைய பா.ஜ.க.ன்னு நெனச்சுட்டாங்க போல!