அண்ணாமலைக்கு அடுத்த மிரட்டல்!

அண்ணாமலைக்கு அடுத்த மிரட்டல்!

Share it if you like it

தி.மு.க.காரர்கள் கெடு வைத்தால், திரண்டு எழுந்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேசுவதற்கு, கேட்பதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்று சுப.வீரபாண்டியன் மிரட்டில் விடுத்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தி.மு.க. தலைவர்கள் திணறி வருகிறார்கள். இதனால், அண்ணாமலை மீது தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளனை கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். இத்தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த அண்ணாமலை, “அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பா.ஜ.க. ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்தை விமர்சனம் செய்யும் வகையில், தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், “தீர்ப்பே சொல்லியாச்சு நீங்க யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்ளாததற்கும். போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. கண்ணில் கண்ணீர் வர வரைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. ஓ மீசையும் இல்லையா.. என்னால் உதவ முடியாது. மிக வருந்துகிறேன்” என்று கிண்டல் செய்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தது. ஆகவே, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது கருத்தை ஏற்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்கூட வாட் வரியை குறைத்தன. ஆனால், தமிழகம் மட்டும் வாட் வரியை குறைக்கவில்லை. மாறாக, குறைக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். எனவே, தமிழக அரசு வாட் வரியை குறைக்க 72 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை, குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்திருந்தார். இதையடுத்து, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை விட்டு அண்ணாமலை தாண்ட முடியாது என்று எகத்தாளமாகக் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள்தான் அமைச்சர்களாக உள்ளனர் என்பதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நல்ல உதாரணம். இவர், என்ன பேரிகார்டு போட்டு தடுக்கும் செக்யூரிட்டி வேலையா பார்க்கிறார்? நெஞ்சில் துணிவிருந்தால் கரூரில் வந்து என்னை தடுக்கட்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பது அமைச்சருக்கு தெரியும் என்றார்.

இந்த நிலையில்தான், நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய திராவிட இயக்கத் தமிழ்ப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், “தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்திருக்கிறது. இதனால் நாட்டுக்கு என்ன நடந்தது. அண்ணாமலை வேண்டுமானால் பல்லக்கு தூக்குவதற்கு வேண்டுமானால் தயாராக இருக்கலாம். ஆனால், கெடு விதிப்பதற்கு உரிமை இல்லை. அண்ணாமலைக்கு தி.மு.க.காரர்கள் கெடு வைத்தால், திரண்டு எழுந்தால் 72 மணி நேரத்தில் அண்ணாமலை கூட்டத்தில் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஆள் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்கு அண்ணாமலையின் பதில் என்னவோ?


Share it if you like it