பத்திரிக்கையாளர் சந்திப்பில் தாம் எந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றேன் என்பதை கூட மறந்து விட்டு உளறி கொட்டிய ஜோதிமணி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஜோதிமணி. இவர், தெரிவிக்கும் பெரும்பாலான கருத்துக்கள் பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கும். இதன்காரணமாக, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கும் காங்கிரஸ் எம்.பிக்கும் சமூகவலைத்தளங்களில் கருத்து மோதல்கள் தொடர்வது வழக்கம். இதுதவிர, தனது இருப்பை காட்டிக் கொள்ளும் விதமாக சர்ச்சைக்குறிய வகையில் பேசி மாற்று கட்சி தலைவர்களிடம் வாங்கி கட்டி கொள்வது தொடர்கதையாக உள்ளது.
அந்தவகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் இவர் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஜோதிமணி, பாரதப் பிரதமர் மோடி மீது தனது வன்மத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரை கற்களால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதையடுத்து, பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் கரு.நாகராஜன், ஒரு எம்பியாக இருந்து கொண்டு இதுபோல் கீழ்த்தரமாக பேசுகிறீர்களே, நீங்கள் எல்லாம் ஒரு பெண்ணா? என கேள்வி எழுப்பி இருந்தார். வாக்களித்து வெற்றி பெற வைத்த கரூர் மக்களுக்கு சேவையை செய்யாமல் வெட்டி விளம்பரம் தேடி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இன்று வரை உள்ளது.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்று இருந்தார். இதுதவிர, கரூர் எம்பி ஜோதிமணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து, ஜோதிமணிக்கு மானம்கெட்டு கரூர் மக்கள் வாக்களித்து விட்டதாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு, கரூர் எம்பி ஜோதிமணி கூறியதாவது; கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானம்கெட்டு எனக்கு வாக்களித்தவர்கள் என்று சொல்கிறார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதனை கூறியதற்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாற்றை நாங்கள் படைத்துள்ளோம் என உளறி கொட்டிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.