அட கட்டையிலே போறவனே என கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள். அதை உறுதி செய்யும் விதமாக வாணியம்பாடி அருகே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் கோவிலின் தெற்கு ரத வீதிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என்று திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தெருவின் பெயரை மாற்றியது. இதற்கு, எதிர்வினை ஆற்றும் விதமாக, தமிழகபா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய போராட்டத்தை திருவாரூரில் நடத்தினார். தமிழகத்தில் எவ்வளவோ ஊர்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. அங்கு சாலை பணிகளை மேற்கொண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரை வையுங்கள் என காட்டமான முறையில் பேசியிருந்தார். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளி இதோ.
பா.ஜ.க தலைவர் ட்விட்டர் பதிவு; வாணியம்பாடி அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்திற்குச் சாலை வசதி இல்லை. இறந்தவர் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல கட்டையில் சுமந்து சென்ற ஊர் மக்கள். இது போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் தமிழகத்தில் உள்ளது.
2021-22-ஆம் ஆண்டு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்திற்கு தி.மு.க அரசுக்கு பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்கிய நிதி 440 கோடி ரூபாய் ஆகும். சாலைகளுக்கு தனது குடும்பத்தாரின் பெயரை சூட்ட முனைப்புக் காட்டும் தமிழக முதல்வர். இதுபோன்று சாலை வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈ.சி.ஆரில் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்கி கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், மலைவாழ் மக்களின் துயரங்களை போக்க முன்வரவேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.