தமிழகத்தில் இருக்கும் திரைப்படத்துறையினர் பலரும் பிரதமர் மோடியை பாராட்டிக் கொண்டிருக்க, டெல்லி பா.ஜ.க. தலைவர்களோ தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடர் கழகம், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பிரதமர் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. அதேசமயம், தேச நல விரும்பிகளும், ஆன்மிகவாதிகளும், நடுநிலைவாதிகளும் பாரத பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் பாக்யராஜ், பேரரசு, நடிகர் மாதவன் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியைப் பாராட்டி பேசி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக போலி போராளிகள் விஷத்தை கக்கி வருகின்றனர்.
இந்த சூழலில், டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரை பாராட்டி வருவதோடு, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்ன செய்து விட்டார் ராம்குமார் என்று கேட்கிறீர்களா? ராம்குமார், கடந்த வருடம்தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இவர், கட்சியில் சேர்ந்தது முதல் தற்போதுவரை தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுருக்கமாக ஆங்கிலத்தில் ‘நோட்’ போட்டு டெல்லியிலுள்ள சீனியர் பா.ஜ.க. தலைவர்களுக்கு ரெகுலராக அனுப்பி வருகிறார்.
சமீபத்தில், தமிழகத்தில் விஸ்வரூம் எடுத்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி குறித்தும் விபரமாக நோட் போட்டு அனுப்பி இருக்கிறார் ராம்குமார். அதேபோல, வாரணாசி விஸ்வநாதர் கோயிலை 1,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு நாகா சாதுக்கள் எப்படி எல்லாம் பாதுகாத்து வந்தனர் என்பது பற்றி ஆராய்ச்சி செய்து, அது தொடர்பான விபரங்களையும் டெல்லி பா.ஜ.க. தலைவர்களுக்கு அனுப்பி இருக்கிறார். இதை படித்துவிட்டுத்தான் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் ராம்குமாரை பாராட்டி வருகின்றனர்.
Super