கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாகும்.
அதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.காஷ்மீருக்கு என்றே தனி ராணுவப்படை பிரிவு, வெகு விரைவில் விமானப்படை பிரிவு என்றும், மேலும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ’ஆப்ரேஷன் மா’ என்னும் நடவடிக்கையை ராணுவம் துவங்கியுள்ளது.
ஐம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தால் அவர்களை முன்பெல்லாம் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் உள்ளூர் இளைஞர்களும் கொல்லப்படுவர். இதனால் இறந்த இளைஞர் தியாகியை போல் மாற்றப்பட்டு மேலும் பல இளைஞர்கள் ராணுவத்திற்கு எதிராக பொங்கி எழுவர்.
இதனை தடுக்கும் பொருட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபரின் பெற்றோரை நேரடியாக களத்திற்கு கூட்டி வந்து அவர்களிடம் பேசும் பொழுது சிலர் மனம் திருந்தி ஆயுதத்துடன் சரண்டர் ஆகிவிடுகின்றனர். இதனால் அந்த இளைஞர் உயிர் இழக்கும் நிலை மாறுவதுடன் மனம் திருந்தி குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு ராணுவம் வழங்குவதால்.
பல இளைஞர்கள் மெல்ல மெல்ல தீவிரவாதத்தை விட்டு அமைதி பாதைக்கு திரும்புவதால் ’ஆப்ரேஷன் மா’ நல்ல பலனை அளித்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.