இந்த அரசு சினிமா அரசு என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பொழுது, அதற்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் திணறிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவரும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமாக இருப்பவர் மனோ தங்கராஜ். இவரிடம், பெண் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்வி? இந்த அரசு ஒரு சினிமா அரசு என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?. அவருக்கு பதில் சொல்வது வந்து என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை என மழுப்பலாக அமைச்சர் சிரித்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
அதன் லிங்க் இதோ.
அதே போல, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மதுவிற்பனை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொருளாதார புளி ஜெயரஞ்சன் ஆகியோர் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இன்னும் 72 மணி நேரம் தமிழக அரசுக்கு கெடு விதிக்கிறேன். இதனை, நிறைவேற்ற தவறும் பட்சத்தில் கோட்டையை பா.ஜ.க முற்றுகையிடும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளாரே இது பற்றி உங்கள் பதில் என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு, இரு அமைச்சர்களும் நீ பதில் சொல் இல்லை நீ பதில் சொல் என்பது போல திருதிருவென விழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.