பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரே நாடு இணையதள ஊடகத்திற்கு அளித்த அற்புதமான பேட்டியின் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. அக்காணொளியில் அவர் கூறியதாவது;
முழுமையாக என்னை உணர்ந்து கொண்டவர் என் மனைவி. அதனால், என்னுடைய சுமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதனால் என் குழந்தைகளை அவர் சமாதானப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பொதுவாக ஒரு மாநிலத் தலைவர் பொறுப்பு என்பது சிலருக்கு லேட்டாக தான் கிடைக்கும். பேர குழந்தைகள் இருப்பார்கள் குழந்தைகள் எல்லாம் பெரியவர்களாக ஆகி இருப்பார்கள். ஆனால், எனக்கு இது ரொம்ப சின்ன வயதிலேயே கிடைத்துவிட்டது.
நானும் ஒரு அப்பா இருக்க வேண்டும் அவர்களோடு நடந்து போக வேண்டும் என்ற ஆசை உள்ளது. சினிமாவிற்கு அவர்களை கூட்டிக் கொண்டு போக வேண்டும். யாரும் என்னைப் பார்க்காதவாறு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு அவர்களோடு தனிமையில் நடந்து வரவேண்டும். டீச்சர்ஸ் மீட்டிங் சென்று அமைதியாக பார்த்து விட்டு வரவேண்டும். ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆசை எனக்கும் இருக்கு. ஆண்டவன் முடிவு நான் அந்தக் காலகட்டத்தைத் தாண்டி பயணிக்க வேண்டும் என்று இருக்கு. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டு பயணம் செய்து கொண்டு இருக்கிறேன்.
என் குழந்தைகளை என்னோடு அடையாளப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அதை நான் தவிர்த்து விடுகிறேன். பல இடத்தில் அதை நான் செய்து விடுகிறேன். கடற்கரைக்கு சென்றால் கூட மாஸ்க் போட்டு கொண்டு நடப்பது. உணவகத்திற்கு சென்றால் கார்னர் டேபிள் கேட்பேன் அல்லது தனி அறை வேண்டுமென கேட்பேன். ஒருவர் என்னிடம் வந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டால் அதை பார்த்து என் மகனுக்கு ஒரு தவறான எண்ணம் வந்து விடக்கூடாது என் அப்பா ஒரு பெரிய ஆள் ஏதோ சாதித்து விட்டார், அதனால், தான் எல்லோரும் அவரிடம் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதை பார்த்து என் மகன் அப்பா பெயரை பயன்படுத்தி நாமும் மேலே வந்து விடலாம் என்று எண்ணம் வந்து விடுமோ என்பதற்காக என் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்களை கூட நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் என தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.