நேர்காணலில் ஆவேசமான மாஜி அதிகாரி!

நேர்காணலில் ஆவேசமான மாஜி அதிகாரி!

Share it if you like it

ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அனுசுயா பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் ஆவேசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையை சேர்ந்த விடுதலை புலிகள் இயக்கம் நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21 தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில், 18 பேர் உடல் சிதறி பலியாகினர். இச்சம்பவத்தில், படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர் (ஓய்வு) காவல்துறை உயர் அதிகாரி அனுசுயா. இவர், ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதுதவிர, அண்மையில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளியான பேரறிவாளனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, அனுசயா தமிழக முதல்வர் ஸ்டாலினை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வெளுத்து வாங்கி வருகிறார். அந்தவகையில், பேசு தமிழா பேசு எனும் இணையதள ஊடகத்தில் அளித்த பேட்டியில், மேடைகளில் பேசும் பொழுது விடுதலை புலிகளை கொச்சையாக திட்டுகிறீர்கள் நளினியை கொச்சையாக விமர்சனம் செய்கிறீர்கள் ஏன்? அவ்வளவு கோவம் என தம்பி ஒருவர் கேள்வி ஒன்றினை அனுசயாவிடம் முன்வைக்கிறார். அதற்கு, உன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை முடிந்தால் எனது போட்டியை போட்டால் போடு என கோபமாக கூறிக் கொண்டே எழுந்து செல்ல முற்படுகிறார். நளினி என்ன உன் அக்காவா? பிரதமரை கொன்றவள் தின்று விட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் என ஆவேசமாக கூறுவது போல அக்காணொளி அமைந்து உள்ளது மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் ஐபிசி ஊடக நெறியாளர் பேரறிவாளன் விடுதலை குறித்து எழுப்பிய கேள்விக்கு காட்டமான முறையில் பதில் அளித்து இருந்தார் அதன் லிங்க் இதோ.


Share it if you like it