Share it if you like it
இயக்குனர் மற்றும் நடிகரான வேலு பிரபாகரன் சமீபத்தில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனராய் இருந்து பிரபலமானதை விட விவாத மேடையில் பங்கேற்று தான் அதிகம் பிரபலமானார். ஏனென்றால் அனைத்து விவாத மேடைகளிலும் பங்கேற்று ஹிந்து கொள்கைகளுக்கு எதிராக பேசுவார். இந்நிலையில் வேலு பிரபாகரன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டுள்ளார். இதில் விஷேஷம் என்னவென்றால் இவர் ஒரு கடவுள் மறுப்பு கொள்கையாளர். விவாத மேடைகளில் ஹிந்து மதத்தை விமர்சனம் செய்வதும் தனி மனித வாழ்க்கையில் கோவிலுக்கு செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழ்மொழியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை என்று. அதற்கேற்ப சிறந்த உதரணம் தான் வேலு பிரபாகரன் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Share it if you like it