மும்பையில் குடிபோதையில் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு கலாச்சார மோகம் ஒருபுறம் என்றால் திரையில் கதாநாயகர்கள் அடிக்கும் கூத்து, கும்மாளங்களை பார்த்து இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனைமெய்ப்பிக்கும் வகையில், பிஞ்சிலேயே பழுத்த பழங்களின் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பையை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் பார்ட்டியை முடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்ப வேண்டி ஓலா காரை புக் செய்து உள்ளனர். அதில், போதை தலைக்கு ஏறிய ஷில்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காரில் ஏறியதில் இருந்தே ஓட்டுனரிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தரக்குறைவான வார்த்தைகளால் ஓட்டுனரை திட்டி இருக்கிறார். இதற்கு, மேல் பொறுமை காக்க முடியாது என்று கருதிய ஓட்டுனர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு புகார் செய்து இருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேரடியாக களத்திற்கு வந்து இருக்கின்றனர். இதையடுத்து, ஷில்பாவை அணுகி விசாரணை மேற்கொண்ட பொழுது அவள் குடித்து இருப்பதை காவலர்கள் உறுதி செய்து இருக்கின்றனர். ஆனால், அப்பொழுதும் அடங்காத ஷில்பா ஓலா வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு அடாவடி செய்தது. சாலையில் சென்று கொண்டு இருந்தவர்களை வம்பு இழுத்தது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர, காவலர்களை ஒருமையில் திட்டி இருக்கிறார். நீ மீடியாவை அழைத்தாலும் எனக்கு எதுவும் ஆகாது என குடிபோதையில் காவலர்களுக்கு சவால் விடுத்து இருக்கிறார். மேலும், காவலர் ஒருவரின் காலரைப் பிடித்து மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் அவரை எட்டி உதைத்தும் இருக்கிறார்.
ஷில்பாவின் செயலை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது தோழி தடுக்கு முயன்ற பொழுது அவருக்கு கன்னத்தில் பளார் என்று அறை விழுந்து இருக்கிறது. இதனை, எல்லாம் கார் ஓட்டுனர் தனது செல்போனில் பதிவு செய்து இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி எடுக்கப்பட்ட இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.