மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு பிரபல சீரியல் நடிகர் பால சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த திட்டம் தான் ‘அக்னிபாத்’. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவெனில் அதிக அளவிலான இளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ராணுவத்தை மேலும் வலிமையாக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற பலரது ஆசை இதன் மூலம் பூர்த்தியாகும் என்பதே நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட சூழலில் தான், அக்னிபாத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றன. அந்தவகையில், பிரபல சீரியல் நடிகர் பால சுப்பிரமணியன் அக்னிபாத் திட்டம் குறித்து தனது முகநூல் பக்கத்தியில் கூறியதாதவது.
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை. ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15,000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை. ஒப்பந்த அடிப்படையில் 10000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.
பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது எரியவில்லை. ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை. வெறும் 10000 ம் சம்பளத்திற்கு இளைஞர்களை கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது எரியவில்லை.
ஆனால், 21 வயதுக்குள்ளாகவே ஒரு இளைஞனை மாதம் 30000 ம் ஊதியம் பெறவைத்து, 4 ஆண்டு முடிவில் 21 லட்சத்திற்கு அதிபதியாக்கி, உடல் மற்றும் மனவலிமையோடு வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய அக்னிபத் திட்டம் வரப்போகிறது என்றதுமே உங்களின் அடிவயிறெல்லாம் பற்றி எரிகிறதென்றால் நீங்கள் தான்டா இந்த நாட்டின் முதல் எதிரி. உங்களுக்கு படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை.
டிகிரி முடித்தும் வேலை கிடைக்கவில்லையே என்று மாதம் 3000 ம் ரூபாய்க்கு உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொண்டிருப்பவனைப் பற்றியும் கவலையில்லை. BE படித்தும் கரும்பு வெட்டும் கூலியாக போகும் இளைஞனைப்பற்றிய கவலையும் இல்லை. படித்த படிப்புக்கேற்ற வேலையின்றி வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப்பற்றியும் கவலையில்லை.
ஆனால், தேசப்பற்று மிக்க வீரர்களாக பொருளாதார வலிமையோடு வரும் அக்னிவீரர்களை பற்றி நினைக்கும்போதே உங்களுக்கு கவலை தொற்றிக்கொள்கிறது என்றால், உங்களின் இளைஞர்கள் மீதான அக்கறை தெரியவில்லை. உங்களுக்குள் உண்டான பயமே தெரிகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் ஆமாம்சாமி இளைஞர்களாக அக்னிவீரர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கொடி பிடிக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கலவரம் செய்யமாட்டார்கள். மாறாக ஒருமித்த உரத்த குரலில் வந்தேமாதரம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் என்பார்கள்.
வாழ்த்துக்கள் சக நண்பரே,நாடு நலம்பெற
ஏதாவது திட்டம் நாட்டிற்காக வராதா என்று ஏங்கியது உள்ளம் நல்ல திட்டம் நாட்டிற்காக கொண்டு வந்தால் அதை எதிர்பார்களாம். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்