கஸ்பரை கசக்கி பிழிந்த  ஸ்ரீனிவாசன்!

கஸ்பரை கசக்கி பிழிந்த ஸ்ரீனிவாசன்!

Share it if you like it

பிரபல ஊடகமான நியூஸ் 18 நடத்திய மக்கள் சபை கூட்டத்தில் பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசன் கிறிஸ்தவ பாதிரியாரை வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்றைய தமிழ்நாடு பெரியார் மண்ணா? ஆன்மீக மண்ணா? என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் கடந்த 18.6.2022 திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க எம்.எல்.ஏ கோவி. செழியன், திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழி மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டவர்கள் இது பெரியார் மண் என்ற தலைப்பிலும் இது ஆன்மீக மண் தான் என்ற தலைப்பில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன், ஆன்மீக பேச்சாளர் மணிகண்டன், தாம்ப்ராஸ் நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, நடுவராக இருந்தவர் பா.தமிழரசன்.

அந்தவகையில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், சனாதன மதத்தை பற்றி ஜெகத் கஸ்பர் பேசக் கூடாது. நீங்கள் கிறிஸ்தவர் அருட் தந்தை உங்களை நாங்கள் மதிக்கிறோம். முதலில் நீங்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசுங்கள். கிறிஸ்தவ மதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசுங்கள். கிறிஸ்தவ மக்களுக்கு எவ்வளவு உரிமைகள் மறுக்கப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்களுக்கு இடுகாட்டில் உரிமைகள் மறுக்கப்படுகிறது இதே திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு, வந்து இவர் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார், வைதீகத்தை பற்றி பேசுகிறார். நீங்கள் கூறும் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை, முதலில் உங்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஆரம்பியுங்கள் என்று தான் நாங்கள் சொல்கிறோம்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று பேசும் அக்கா அருள்மொழி. தமிழ்நாட்டில், உள்ள எல்லா மசூதிகளிலும் இஸ்லாமிய பெண்மணிகள் வழிபட வேண்டும் என்று அனுமதி கேட்பாரா? எல்லா மதங்களையும் ஏற்று போற்றுகிற ஒரே மதம் ஹிந்து மதம் தான் என்று பா.ஜ.க தலைவர் சீனிவாசன் நெத்தியடியாக பேசி இருக்கிறார். மேலும், விவங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it