தங்கம் மறுசுழற்சி செய்யும் நாடுகளில் இந்தியா 4-வது பெரிய நாடாக உருவெடுத்திருக்கிறது.
உலக தங்க கவுன்சில் (WGC) ‘தங்க சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா 2021-ம் ஆண்டில் மட்டும் 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கிறது. இதன் மூலம் உலகளவில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேசமயம், சீனா 168 டன் மறுசுழற்சி செய்திருப்பதால், உலக தங்க மறுசுழற்சி தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இத்தாலி 80 டன்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 78 டன்களுடன் 3-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இதன் மூலம் 2013-ம் ஆண்டு 300 டன்கள் இருந்த அறிக்கையின்படி, இந்தியாவின் தங்க சுத்திகரிப்புத் திறன் 2021-ல் 1,500 டன்கள் (500%) அதிகரித்திருப்பது நமக்கு தெரியவருகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் தங்க சுத்திகரிப்பு நிலப்பரப்பு குறைவாக இருந்தது. இதன் பிறகு, முறையான செயல்பாடுகளின் மூலம் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது, 2013-ல் 5 ஆக இருந்தது 2021-ல் 33 ஆக உயர்ந்திருக்கிறது. இவற்றுடன் முறைசாரா துறையானது கூடுதலாக 300 முதல் 500 டன் சுத்திகரிப்புக்குக் காரணமாகி இருக்கிறறது. மாசுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் கடுமையாக்கியதே இதற்கு காரணமாகும். அதேபோல, வரிச் சலுகைகளும் தங்கச் சுத்திகரிப்புத் தொழிலின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணமாகும். ஆக, மொத்தத்தில் இறக்குமதியில் தங்கத்தின் பங்கு 2013-ல் வெறும் 7 சதவீதத்தில் இருந்து 2021-ல் 22 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இன்றைய காலகட்டத்தில் இளம் நுகர்வோர் அடிக்கடி தங்கத்தின் வடிவமைப்புகளை மாற்ற விரும்புகின்றனர். இதனால், நகைகளை வைத்திருக்கும் காலம் தொடர்ந்து குறையும். இதுவும் அதிக அளவிலான மறுசுழற்சிக்கு பங்களிக்கும். அதேசமயம், வலுவான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து, அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் நேரடி விற்பனையைக் குறைக்கும். இதை நுகர்வோர் கண்டுபிடிப்பார்கள். தவிர, தங்கத்தை நேரடியாக விற்பதைவிட அடமானமாக வைப்பது எளிது. எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட மறுசுழற்சிக்கு சிறந்த ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை தங்க விநியோகச் சங்கிலியை இறுதி வரை உள்ளடக்கியதாக ஆதரிப்பது அவசியம்.
உலகின் 4-வது பெரிய மறுசுழற்சி செய்யும் நாடாக இருந்தாலும், இந்தியா தனது சொந்த தங்கத்தில் சிறிய அளவில் மறுசுழற்சி செய்கிறது. உலகளாவிய மறுசுழற்சி செய்ததில், குப்பை சுமார் 8% மட்டுமே உள்ளது. தற்போதைய தங்க விலை நகர்வுகள், எதிர்கால விலை எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார பின்னணி ஆகியவற்றால் மறுசுழற்சி இயக்கப்படுகிறது” என்பது குறிப்பிடத்தக்கது.