உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் எலிகளை ஒழிக்க பூனையாரின் உதவியை நாடிய காவல்துறையினர்.
பொதுவாக காவல் நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகளின் தொல்லைகள் அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில், கர்நாடக மாநிலம் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரிபிதனூரில் அமைந்து இருக்கும் காவல்நிலையத்தில் எலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து இருக்கிறது. இதன்காரணமாக, முக்கிய ஆவணங்களை எலிகள் நாசம் செய்து விடுகின்றன. இதுதவிர, நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு பல சமயங்களில் காவல்துறையினர் உள்ளாக வேண்டி இருக்கிறது.
எனவே, காவல் நிலையத்தில் இருந்து எலிகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக எலி பொறிகள் அதாவது ( எலி கூண்டுகள் ) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், எதிர்பார்த்த பலன் அதன் மூலம் கிடைக்கவில்லை. அந்தவகையில், இரண்டு பூனைகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளனர். இதையடுத்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் எலிகளை இரு பூனைகளும் மிகச் சிறப்பாக களையெடுக்கும் பணியினை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எலிகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக