கடன் வாங்கி தருவதாக கமிஷன் பெற்றுக் கொண்டு மோசடி செய்த தி.மு.க நிர்வாகி உட்பட அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஜலீல். இவர், சேது பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். இவருக்கு, சென்னை வில்லிவாக்கத்தைச் சேரந்த, பி.எம். ரெட்டி என்ற முத்துவேல் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தவகையில், தாம் மிகப்பெரிய நிதி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தம்மால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் உதவி பெற்ற தர முடியும் என ஆசைவார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். இதனை, நம்பிய ஜலீல் தனது கல்லூரியின் மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் கடன் வாங்கி தருமாறு கேட்டு இருக்கிறார். அதற்கு, கமிஷனாக 5.46 கோடி ரூபாய் வேண்டும் என கல்லூரி அதிபரிடம் முத்துவேல் கேட்டு வாங்கி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, தி.மு.க நிர்வாகி தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த ஜலீல் தாம் கொடுத்த 5.46 கமிஷன் தொகையை திருப்பி தருமாறு கேட்டு இருக்கிறார். இதற்கும், முத்துவேல் உரிய பதில் அளிக்கவில்லை. இதுதவிர, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஜலீல் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தி.மு.க நிர்வாகி தற்பொழுது சிறை பறவையாக மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. .