கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத மதகுருமார்களை கண்டித்து, நோ ஹிஜாப் என்கிற பெயரில் ஈரான் பெண்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது வழக்கமாக இருந்து வருகிறது. முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இப்பழக்கம் பின்னர் படிப்படியாக இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது. இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்துவந்த இப்பழக்கம், தற்போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமிய பெண்கள் என்றாலே ஹிஜாப், பர்தா, புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணியாத பெண்களுக்கு தண்டனை கொடுக்கும் அளவுக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்பதும் குற்றமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான், கல்விக்குத் தடை, கட்டாய ஹிஜாப், பர்தா, புர்காவுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் கொதித்தெழ ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஹிஜாப், பர்தா, புர்கா அணிய மறுத்தும் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், தற்போது ஈரானிலும் பெண்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இஸ்லாமிய நாடான ஈரானிலும் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் வெளியில் சென்றால் ஹிஜாப், பர்தா, புர்கா அணிய வேண்டும் என்பது கட்டாய நடைமுறையாக இருந்து வருகிறது. இதை எதிர்த்துத்தான் தற்போது பெண்கள் போராட்டத்தைத் துவக்கி இருக்கிறார்கள்.
‘நோ ஹிஜாப்’ என்கிற முழக்கத்தோடு இஸ்லாமிய பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஹிஜாப், பர்தா, புர்கா அணியாமல் வீதிகளில் வலம் வலம் ஈரானிய பெண்கள், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்திருக்கும் பெண்களிடம் சென்று ஹிஜாப்பை அகற்றுமாறு கூறிவருகின்றனர். மேலும், பொது இடங்களில் ஹிஜாப், பர்தா, புர்கா அணியாமல் நடனமாடி தங்களது சுதந்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் குதித்திருக்கும் பெண்களை, சில இடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.