முகமது சுபைர் மீதான வழக்குகளை விசாரிக்க உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருக்கிறது.
Alt நியூஸ் என்கிற பெயரில் இயங்கி வரும் உண்மை கண்டறியும் செய்தி நிறுவனத்தின் இணை இயக்குனர் முகமது சுபைர். இவர், ஹிந்துக்களின் மனது புண்படும்படியாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இவரது கருத்துக்கு எதிர் கருத்துப் பதிவிடுபவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும், அவரது குடும்பத்தினரை பற்றி பதிவிட்டு மிரட்டுவதுமாக இருந்து வந்திருக்கிறார். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு முதியவர் இவரது கருத்துக்கு எதிர் கருத்து பதிவு செய்ய, உடனே அவரது பேத்தியின் புகைப்படத்தை போட்டு அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்துகளை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி போலீஸார் 2018-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, முகமது நபி குறித்து பேசிய விவகாரத்தை கையில் எடுத்த சுபைர், தொடர்ந்து அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இஸ்லாமியர்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விட்டார். மேலும், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை டேக் செய்து பதிவிட்டு, இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பி விட்டார். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த சூழலில், சுபைரின் பல்வேறு பதிவுகள் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக உத்தரப் பிரதேச மாநிலத்திலும் சீதாபூர், லக்கிம்பூர், ஹத்ராஸ், முசாபர்நகர் உட்பட பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி முகமது சுபைரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேசமயம், உ.பி. மாநிலம் சீதாபூர் வழக்கும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, கடந்த 4-ம் தேதி உ.பி. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுபைரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார். எனினும், டெல்லி வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், உ.பி.யில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு தொடர்பாக முகமது சுபைரிடம் புலன் விசாரணை செய்வதற்காக, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது அம்மாநில அரசு.
இது ஒருபுறம் இருக்க, 2012-ம் ஆண்டுக்கு முன்புவரை முகமது சுபைரை பற்றிய எந்த அடையாளங்களும் இல்லை என்றொரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது, இன்போசிஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்ததாக சுபைர் கூறினாலும், அவரது அடையாள அட்டைகள் எதுவும் நிறுவனத்தில் இல்லையாம். ஆகவே, உண்மையிலேயே முகமது சுபைர் இந்தியர்தானா அல்லது இந்தியாவை உளவு பார்க்க வந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஏஜென்ட்டா என்பது குறித்த சந்தேகமும் எழுந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.