தி.மு.க. ஆட்சியில் நிகழும் அவலத்தை பிரபல எழுத்தாளர் பிரபாகரன் சுட்டிக்காட்டி இருந்தார். இந்தநிலையில், அமைச்சர் கே.என்.நேரு அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு எங்கும் லஞ்சம், எங்கும் ஊழல் நடப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதுதவிர, விடியல் அமைச்சர்களின் துறையில் நடக்கும் தில்லு முல்லுகளை தொடர்ந்து தோலுரித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், பிரபல எழுத்தாளர் பிரபாகரன் தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றினை இவ்வாறு முன்வைத்து இருக்கிறார்;
சென்னையில் உள்ள 15 மண்டலங்களை 23 ஆக உயர்த்த அரசு அதிகாரிகள் முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு மண்டலம் அமைய வேண்டும் என்றால், அதற்கான மேல்நிலை அதிகாரிகள், மண்டலத் தலைவர், துணைத் தலைவர், மண்டலக் கோட்ட, செயல், உதவிப் பொறியாளர்கள் எல்லாம் வேறு துறைகளில் இருந்து மற்றலாகி வருவர். அவர்கள், எல்லாம் எப்படி வருவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். குறிப்பாக, கீழ்நிலை ஊழியர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 200 பேராவது முதலில் தற்காலிகமாக அமர்த்தப்படுவர்.
மூன்று ஆண்டுகளில் பேரம் பேசி பணி உறுதி செய்யப்படும். இதற்கு, டி.என்.பி.எஸ்.சி. தேவையில்லை. நேரடியாக பணி நியமனம் தான். அதன்பிறகு, புதிய கட்டடங்கள், புதிய வாகனங்கள் எல்லம் வாங்கலாம், திறப்பு விழா நடத்தலாம் இதற்கு எல்லாம் எங்கே? இருந்து நிதி கிடைக்கும் என்ற கேள்வியினை முன்வைத்து இருந்தார்.
இச்செய்தி, பத்திரிகைகளில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், உள்ளாட்சிகளில் காலி பணியிடங்கள் அனைத்தையும் டி,என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திடீரென அந்தர் பல்டி அடித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுகுறித்தான, செய்தி தினகரனில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.