குடிக்க வைத்து கொல்வதுதான் திராவிட மாடலா..?

குடிக்க வைத்து கொல்வதுதான் திராவிட மாடலா..?

Share it if you like it

குடிக்க வைத்துக் கொள்வதுதான் திராவிட மாடலா என்று 10 வயது சிறுமி ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று, ‘இது உங்க மேடை’ இனிதான் கச்சேரி ஆரம்பம் என்கிற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய உவந்திகா என்கிற 10 வயது சிறுமி பேசிய பேச்சு அனைவரது நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது என்றால் மிகையல்ல. உவந்திகா பேசுகையில், “எனது தந்தை பெயர் பிரபாகரன். போலீஸ்காரராக இருந்தார். கெட்ட நண்பர்களது சகவாசத்தால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். இதனால், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவ்வப்போது ரத்த வாந்தி எடுப்பார்.

நான் எல்.கே.ஜி. படிக்கும்போது வியாதி முற்றி ஒருநாள் உயிரிழந்து விட்டார். இதன் பிறகு எனது தாயார்தான் மிகவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்து படிக்க வைத்து வருகிறார். தந்தை இல்லாமல் நானும், கணவர் இல்லாமல் எனது தாயும் படும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இது அனைத்துக்கும் காரணம், டாஸ்மாக்தான். ஆகவே, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குடிக்க வைத்து கொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவரும் குடிக்கச் செல்வதற்கு முன்பு வீட்டில் இருக்கும் என்னைப் போன்ற உங்களது குழந்தைகளையும், மனைவிகளையும், குடும்பத்தினரையும் நினைத்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களுக்கு குடிக்கும் என்னமே வராது. அதேபோல, ஒவ்வொருவரும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட போராட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. எனினும், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது நடிகர் ராஜேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி எப்போது நடந்திருந்தாலும், அது எக்காலத்துக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமான குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. சாதாரண ஏழைக்கூலித் தொழிலாளி தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடித்தே அழித்து விடுவதால், அவர்களது குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருகின்றன. தவிர, டாஸ்மாக்கால் ஏராளமான விதவைகள் உருவாகி இருக்கிறார்கள். தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை கடலில் எழுதப்பட்ட வாசகமாகவே இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற குழந்தைகளின் எதிர்காலம் இருண்டகாலமாக மாறாமல் இருக்க வேண்டுமானால், முதலில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Share it if you like it