60 கேரவன் துணையுடன் பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து துவங்க இருக்கும் ராகுல் காந்தியை நெட்டிசன்கள் செம்மையாக கலாய்த்து வருகின்றன்ர.
இந்தியாவில் நடைபெறும் அனைத்து சட்ட மன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் சோர்வை சந்தித்துள்ளனர். இதையடுத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் என அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதவிர, பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் இந்தியாவில் இருந்தே காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கடலில் மூழ்கி கொண்டு இருக்கும் கட்சியை காப்பாற்றும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, `பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) எனும் யாத்திரையை காங்கிரஸ் வெகு விரைவில் துவக்க இருக்கிறது. இந்த யாத்திரையின் தொடக்கம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடை பெற உள்ளது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல ராகுல் காந்தி இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான, பணிகளை அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ செல்லும் ராகுல் காந்தியும் அவருடன் யாத்திரை செல்லும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட ஏ.சி. வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.