திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், மத்திய அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்த, நந்தினியை பா.ஜ.க. நிர்வாகிகள் காவல்துறையில் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போலி போராளிகளை தமிழகத்தில் வளர்த்து விடும் கட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது. திருமுருகன் காந்தி, பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர்கள் சுந்தரராஜன் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சமயத்தில், மேற்கூறிய நபர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக போராடுவர். இதனை, தி.மு.க. மற்றும் அதன் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும். அந்த வகையில், மக்களுக்கு ஆளும் கட்சி மீது கடும் கோவம் ஏற்படும். இதனை, தி.மு.க. தங்களுக்கு சாதகமாக மாற்றி அதில் அரசியல் ஆதாயம் தேடும். அதேவேளையில், தி.மு.க. ஆட்சியில் இருக்கும் சமயத்தில் இவர்கள் அனைவரும் சைலண்ட் மோடில் இருப்பர்.
அந்த வரிசையில், தற்போது உள்ளவர் நந்தினி. இவர், விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் பற்றி பேசுவதில்லை. மேலும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதவிர, மதுக் குடிப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தமிழகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. இது பற்றி எல்லாம் நந்தினி ஏன் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இப்படியாக, விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், நந்தினியும் அவரது தங்கையும், திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். கையில் பதாகையை ஏந்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இத்தகவல், மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தெரியவந்தது. விரைந்து வந்த பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகிகள், பேருந்து நிலையத்தில் அவதூறு பிரசாரம் செய்து வந்த நந்தினியிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த காவல் துறையினர், நந்தினியையும் அவரது சகோதரியையும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.