ராகுல் காந்தி தனது 150 நாட்கள் நடை (கேரவன்) பேரணியை கன்னியாகுமரியில் இருந்து துவங்கியுள்ளார். இதை மு க ஸ்டாலின் , கொடியசைத்து துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் வரை வந்த ராகுல், சென்னையில் ஒரு கூட்டம் கூட போடவில்லை. நாகர்கோவில் – கன்னியாகுமரி தாண்டக் கூடாது என்று தமிழக எஜமானர்கள் சொல்லிவிட்டார்களோ என்னவோ.
அண்ணா ஹசாரே நினைவிருக்கிறதா ? 2011ல் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். அர்விந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் அப்போது தான் வெளிச்சத்திற்கு வந்தனர். அதே நேரம் இங்கு கூடன்குளத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்தது. அதற்கு தலைமையேற்ற S.P. உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அவர் நடக்கடலுக்குள் சென்று தலைமறைவானார். அவரை சந்தித்த அரசியல் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் உதயகுமார் தேர்தலிலும் போட்டியிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தின் போது மத்திய அமைச்சராக இருந்தார் நாராயணசாமி . இவர் உதயகுமார் மீது தேச துரோக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். வெளிநாடுகளிடம் உதயகுமார் பணம் வாங்கி கொண்டு, மக்களை மூளை சலவை செய்வதாக சாட்டினார். . உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக காங்கிரஸ் அரசே குற்றம் சாட்டியது. இப்படி ஒரு தேச துரோகி தான் உதயகுமார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார், தனி கட்சி கண்டார். 2020 டிசம்பரில் டில்லியில் ‘விவசாயிகள்’ போராட்டத்தில் இறங்கினர். விவசாயிகளுடன் விஷமிகள் ஊடுருவினார்கள், ஜனவரி 26, 2021 அன்று செங்கோட்டையில் தேசிய கொடியை இறக்கிவிட்டு , காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டார்கள் . இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட அர்பன் நக்சல் தான் யோகேந்திர யாதவ். இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இவர் தான்.
தற்போது ராகுல் மேற்கொண்டுள்ள யாத்திரையின் போது ராகுலுடன் யோகேந்திர யாதவ், உதயகுமார் இணைந்துள்ளார்கள். உதயகுமாரின் தேச துரோகத்தை அம்பலப்படுத்திய நாரயணசாமி, அதே உதயகுமாருடன் சேர்ந்து பேரணி போகிறார். காங்கிரசின் ஊழலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் யோகேந்திரா அதே காங்கிரசுடன் சேர்கிறார்.
யோகேந்திர யாதவ், உதயகுமார் இருவருமே அர்பன் நக்சல்கள் என்று ஏற்கனவே அம்பலமாகியுள்ள நிலையில், இவர்கள் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் ஏற்கனவே கன்னையா குமார் போன்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான். இந்திய ஒற்றுமை பயணம் என்று அவர்கள் அழைக்கும் ராகுலின் யாத்திரை , ஒற்றுமை யாத்திரையா அல்லது ஆங்காங்கே உள்ள அர்பன் நக்ஸல்களை ஒருங்கிணைக்கும் யாத்திரையா என்பதை உற்று நோக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
Related links / photos
https://twitter.com/spudayakumar/status/1567932781522714625
https://twitter.com/INCTamilNadu/status/1567841264346988544/photo/1
https://twitter.com/INCTamilNadu/status/1567841264346988544/photo/3
https://www.dnaindia.com/india/report-udayakumar-not-to-surrender-says-arvind-kejriwal-173996ac2