பாலிவுட்டுக்கு எதிரான ஹிந்துக்களின் போர்க்கொடியால் ‘லால் சிங் சத்தா’ படத்தைத் தொடர்ந்து ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படமும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதனால், பாலிவுட் பிச்சை எடுப்பதாக பிரபல நடிகை கங்கனா ரணாவத் வசைபாடி இருக்கிறார்.
ஹிந்துக்களின் ‘பாய்காட் பாலிவுட்’ ஹேஷ்டேக் நன்றாகவே வேலை செய்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஹிந்து தெய்வங்களையும், சாமியார்களையும் இழிவுபடுத்திய பாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் ஹிந்துக்கள். பாய்காட் பாலிவுட் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி, பாலிவுட் படங்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவுட்டு வந்தனர். இதன் காரணமாக, அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. இந்த சூழலில், தற்போது பிரம்மாஸ்திரா படமும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதையடுத்து, பாலிவுட்டை வசைபாடி இருக்கிறார் கங்கனா ரணாவத்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவர். சர்ச்சை நாயகியான இவர், பாலிவுட் பற்றியும், வாரிசு நடிகர்கள், நடிகைகள் பற்றியும் வெளிப்படையாக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்புவார். அந்த வகையில், இந்த முறை கங்கனாவிடம் சிக்கி இருப்பவர் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி. இதுகுறித்து கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொன்னவர்களை உடனடியாக சிறையில் தள்ள வேண்டும். ஏனெனில், இப்படத்தை உருவாக்க அயன் முகர்ஜி 12 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், 85 உதவி இயக்குனர்களையும், 14 ஒளிப்பதிவாளர்களையும் மாற்றி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை 400 நாட்களுக்கு மேல் நடத்தி, 600 கோடி ரூபாயை சாம்பலாக்கி இருக்கிறார்.
‘பாகுபலி’ திரைப்படம் கொடுத்த வெற்றியால், ‘ஜலாலுதீன் ரூமி’ என்ற படத்தின் பெயரை, கடைசி நேரத்தில் ‘ஷிவா’ என்று மாற்றி மத உணர்வுகளை சுரண்ட முயன்றிருக்கிறார். இத்தகைய சந்தர்ப்பவாதிகள் படைப்பாற்றலே இல்லாதவர்கள். ஆகவே, வெற்றி பேராசை கொண்டவர்களை, மேதைகள் என்று அழைப்பது இரவை பகல் என்றும், பகலை இரவென்றும் அழைப்பது போலாகும். அதேபோல, இப்படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் போன்றவர்களின் நடத்தையை விசாரிக்க வேண்டும். அவர் தனது திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்களை எழுதுவதை விட மற்றவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
விமர்சனங்கள், போலி வசூல் விவரங்கள், ஸ்டார்களை அவரே விலைக்கு வாங்குகிறார். இந்த முறை ஹிந்து மதத்தையும், தென்னிந்திய அலைகள் மீதும் சவாரி செய்ய முயன்றிருக்கிறார். எல்லோருமே திடீரென பூஜாரிகளாக மாறி தென்னிந்திய நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரிடம் தங்களது படத்தை பிரமோட் செய்யும்படி பிச்சை எடுக்கின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், திறமையான எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ‘பிரம்மாஸ்திரா’ என்ற பேரிடரை சரி செய்ய, அவர்கள் கெஞ்சிச் சென்றவர்களை ஏன் முதலில் பிக்ஸ் செய்யவில்லை” என்று கடுமையாகத் தாக்கி இருக்கிறார். மேலும், ‘பிரம்மாஸ்திரா’ படம் பற்றி சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக வந்திருக்கும் சில பதிவுகளையும் கங்கனா ஷேர் செய்திருக்கிறார்.