சிவனை தொடர்ந்து முருகனை சந்தித்த நரிக்குறவர்கள்!

சிவனை தொடர்ந்து முருகனை சந்தித்த நரிக்குறவர்கள்!

Share it if you like it

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர் எல். முருகனை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக பா.ஜ.க.வின் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட அண்ணாமலை நரிக்குறவர் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என கூறியிருந்தார். இதையடுத்து, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜீன் முண்டா மற்றும் பாரதப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு அண்ணாமலை கொண்டு சென்றார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக, நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து, அச்சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் தங்களது நன்றியை பா.ஜ.க.விற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான டாக்டர். எல்.முருகனை, நரிக்குறவர்கள் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை மீடியான் குழு நேரில் சந்தித்து அவர்களை பேட்டி கண்டது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it